Tuesday, March 17, 2009

திரைப்படம்


அளவில்லாத சிந்தனை, கலைத்துவம்மிகுந்த கற்பனை, அனுபவம் அல்லது போதுமான கல்வி, பொது அறிவு இவையெல்லாம் திரைப்பட துறையில் இருப்பவர்களுக்கு அத்தியாவசிய தேவை. ஒரு திரைப்படம் எடுப்பது சுலபமான காரியம் அல்ல. ஸ்கிரிப்ட் எழுதுவதற்கு முன்பே ஒரு இயக்குனர் கற்பனையில் அப்படத்தை கண்டுவிடுகிறார். கண்ட கர்ப்பனையை அப்படியே செயல்ப்படுத்தி நிஜமாக வெள்ளித்திரையில் கொண்டு வருவது இயக்குனரின் சாமர்த்தியம். இப்படிப்பட்ட விஷயத்தை மிக சுலபமாக எண்ணியும் பேசியும் விடுகிறார்கள் பலர். "ஐடியா" நமக்கு கனவிலோ, அனுபவத்திலோ, சிலருடன் கலந்துரையாடும்போதோ, வாசிப்பதினாலோ தொலைக்காட்சி /வானொலியாகவோ மற்றும் சிந்தனை வழியாகவும் தோன்றலாம். இதே ஐடியா ஒரு இயக்குனருக்கு வந்தால் அவர் அந்த ஐடியா மூலம் மக்களுக்கு எப்படி நல்ல கருத்தை கூறலாம் என்று யோசிப்பார். அதற்கு ஒரு கதை தேவைப்படுகிறது. இந்தக்கதையை முழுமைப்படுத்த பெரியதொரு திரைக்கதை தேவை. ஐடியா; கருத்து; கதை; திரைக்கதை, இவ்வனைத்தையும் ஒன்றாக்க வேண்டும். சில சமயம் வசனத்தைக்கூட இவரே எழுதுவார். இதற்கெல்லாம் சரிப்படி ஆய்வுகள் செய்திருக்க வேண்டும் காரணம் மக்களிடம் போய் சேரும் எந்த ஒரு கருத்தும் பிழையாக இல்லாமை இருத்தல் அவசியம். திரைக்கதையில் பல விதமான சீன்கள், கதாபாத்திரங்கள் இருக்கும். அக்கதாபாத்திரத்திற்கு ஏற்ற நடிகர்களை அவர் சரியாக தேர்ந்தெடுத்திருக்க வேண்டும். முடிந்ததா வேலை? ஸ்கிரிப்ட் எழுத வேண்டும். அதில் நேரம், காலம், இடம், ஒளிப்பதிவின் திசை, வசனம், வசனத்தை யார் பேச வேண்டும், எங்கு தொடக்கம் எங்கு முடிவு, எடிட்டிங், திரான்சிஷன் எல்லாம் குறிப்பிடப்பட்டிருக்க வேண்டும். அதனை அடுத்து, இக்கதை வடிவத்திற்கு ஏற்றவாறு கலை இயக்குனர், இயக்குனரோடு சேர்ந்து, படத்தின் ஒவ்வொரு காட்சியும் எப்படி இருக்க வேண்டும் என்பதை வரைந்திருக்க வேண்டும். அந்தக்காட்சி அழகாக தோன்ற லைட் மென் உதவி தேவை. படப்பிடிப்பு இடத்தில் எப்படி காண்கிறோமோ அப்படியே படம்பிடிக்க ஒரு நல்ல ஒளிப்பதிவாளர் தேவை. இப்படி ஒரு காட்சியை மட்டும் படப்பிடிப்பதற்கு இவ்வளவு வேலை இருக்கும் பொது, படப்பிடிப்பின் போது கதாபாத்திரர்களோ, அல்லது ஒளிப்பதிவாலரோ தவறு செய்துவிட்டால் மறுபடியும் எடுக்க வேண்டும் அக்காட்சியை. படப்பிடிப்பு கடைசி வரை முடிந்தப்பின் எடிட்டிங் செய்ய வேண்டும். அவ்வப்போது காட்சிகளை இணைக்க வேண்டும், தேவையில்லாததை வெட்ட வேண்டும், இசையினை அதனோடு கோர்க்க வேண்டும், அதே வேளையில் அதன் தரத்தையும் பார்த்துக்கொள்ள வேண்டும். ஒவ்வொரு காட்சிகளுக்கேற்ப இசையினை அமைப்பது இசையமைப்பாளரின் கடமை. இதற்கெல்லாம் செலவழிக்க அப்படத்தை வியாபாரம் செய்யப்போகும் தயாரிப்பாளர். இப்படத்தைப் பற்றி விளம்பரப்படுத்த வேண்டும் மற்றும் உலகமெங்கும் ஏற்றுமதி செய்ய வேண்டும். அதனிலும் இன்னொரு சிக்கல். அதனை திரையரங்க உரிமையாளர்கள் வாங்க வேண்டும். இது மட்டும் அல்ல, இன்னும் பல சிக்கல்கள், வேலைப்பாடுகள், இன்னல்கள் உள்ளன. சில மக்கள் படத்தினை ஏற்றுக்கொள்வார்கள் சிலர் மாட்டார்கள். அது அது அவர்களின் ரசனையைப் பொருத்தது. அதனை நாம் ஒன்றும் குற்றம் கூற முடியாது. கஷ்டப்பட்டு உழைத்து சமர்ப்பிக்கும் அவர்களது படைப்பிற்கு மக்கள் மத்தியில் வரவேற்புக் கிடைக்காதது ஏன்? இயக்குனரின் குற்றமா அல்லது மக்களின் ரசனையின்மையா?


-பரதன்-

1 comment:

Anonymous said...

யாருடைய குற்றமும் இல்லை என்று நான் கருதுகிறேன்
என்னுடைய பார்வையில் கலை என்பது ஒரு மனிதனின் ( கலைஞன்) வெளிப்பாடுகள் .
அது எதுவாகவும் இருக்கலாம்.. ஓவியம், எழுத்து, இசை, மேடை நாடகம்,
தெருக் கூத்து, பாடல், திரைப் படம்....இப்படி எதுவாகவும் .........
ஒரு கலைஞனுக்கு ஏற்படுகின்ற உணர்வுகளை பொதுவில் ( மக்களுக்கு) வழங்க மேலே குறிப்பிட்டவற்றில், தாம் தேர்ச்சி பெற்றதில் வெளிக்கொணர்கிறான்.
இதன் வழியாக அவன் ரசித்த, உணர்ந்த விஷயத்தை பொதுவில் சமர்பிக்கிறான்.
அவ்வளவுதான் .....
இதை மக்கள் ரசிக்கிறார்கள் ...
ரசிக்க தவறும் மக்களை குறை கூறும் அதிகாரம் நமக்கு இல்லை என்றே நான் கருதுகிறேன்.
ஏனெனில் ஒரு கலைஞனின் " வேலையா? கடமையா? " (எனக்கு கலை என்பது வேலையும் இல்லை கடமையும் இல்லை) தாம் ரசித்த, உணர்ந்த விஷயத்தை மற்றவர்களுடன் பகிர்ந்துக்கொள்கி்ன்றான்.
அந்த படைப்பை மக்களால் ரசிக்க முடியாமல் போனால் அதற்கு அவன் வருத்த
பட தேவையில்லை.
அவன் படைப்பு மக்கள் ரசனைக்கு ஏற்றார்போல் இல்லை அல்லது இவன் ரசனைக்கு மக்கள் வரவில்லை
இந்த இடத்தில்தான் கலைஞனின் ஆறாம் அறிவு வேலை செய்ய வேண்டும்
தாம் ரசித்த மேன்மையான விஷயத்தை ஜன ரஞ்சக மக்களுக்கு எப்படி வழங்க வேண்டும் என்பதை தெரிந்து வைத்திருக்க வேண்டும்

இது என்னுடைய கருத்து .....
இதுதான் உண்மை என்று சொல்லும் உரிமை எனக்கு இல்லை !

வினோத்குமார் சுப்ரமணியம்