கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கிய நடுநிசி நாய்கள் என்னும் புதிய திரைப்படத்தைக் கண்டேன். பார்ப்பதற்கு முன் அப்படத்தைப் பற்றி நிறைய தப்பான விமர்சனங்கள், செய்திகளைப் படித்தேன், கேட்டேன். படம் பதினெட்டு வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு
உகந்தது என்றும்அறிந்தேன். படத்தின் முதல் இரண்டு நிமிடங்கள் என்னைக் கவர்ந்தது. முதல் விஷயம் படத்தின் ஒளிப்பதிவு, இரண்டாவது இசையே இல்லாமல் இயற்கை சப்தங்களை மட்டும் கொண்டு காண்பித்த விதம். படத்தில் அறவே இசையே கிடையாது என்று எனக்கு ஏற்கனவே தெரியும். இருந்தாலும் கண்டிப்பாக எதாவது ஒரு விதத்தில் வரும் என்று நம்பிக்கையுடன் இருந்தேன். என் நம்பிக்கையை வீணடித்தார் கௌதம். அடுத்து அரை மணி நேரத்தில் நான் பார்த்தவை அனைத்தும் விமர்சனங்களில் சொன்னவை உண்மைதானோ என்று நினைத்தேன்.ஆனால் பார்த்தவை அனைத்தும் உண்மைகள். சமீபத்தில் முன்பு பழகிய ஒரு நண்பரை சந்தித்தேன்.
அவர் ஒரு குறும்படத்தை தயாரித்துள்ளார். அதனைப் பார்த்துவிட்டு ஏன்
இப்படி ஒரு கருத்தைக் கொண்டு இயக்கிநீர்கள் என்று கேட்டேன். அதற்கு அவர் இது ஒரு உண்மை சம்பவம், நேரடியாக பாதிக்கப்பட்ட அந்தப்பையனை நேர்காணல் செய்ய எனக்கு வாய்ப்பு கிடைத்தது. அந்த ஒரு தாக்கத்தில் இயக்கிய படம்தான் என்று சொன்னார். அதாவது சொந்த தந்தையே தன் மகனைப் பாலியல் பலாகாரத்திற்கு ஆழ்த்தியது. மலேசியாவில் இருக்கும் நமக்கே இப்படியெல்லாம் நடக்கிறதா என்று கேள்வி எழும் பொழுது இந்தியாவில் ஏன் உலகமெங்கும் பாலியல் பலாக்காரம் நடக்கும் நாட்டின் பத்திரிக்கைகளைப் புரட்டிப் பார்த்தால் எப்படி திகைப்பாகவும் ஏற்றுக்கொள்ள முடியாத மனப்புழக்கம் வருமோ அந்த நிலைக்கு நான் ஆளானேன் நடுநிசி நாய்களைப் பார்த்து. ஆனால்பார்த்தவை அனைத்தும் உண்மைகள்.
ராமன் ராகவின் பயங்கரம், போக்டன் மற்றும் மாரியஸ் நேஜ்லோவேணு செய்திகள், மார்ஷல் மட்சியல் இன்னும் பல நம்ப முடியாத செய்திகள் உள்ளன. இதைப் போன்று ஓர் உண்மை சம்பவ கதைதான் இது. ஒரு மனிதன் கெட்டவன் ஆவதும் பைத்தியம் ஆவதும் சில தாக்குதல்களால்தான். அது எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். பெரியோர்கள் செய்யும் தவறுகளால் சிறுவர்கள் பாதிப்படையும் கதையே இது. தப்பு செய்யும் பெரியோர்களுக்கு ஒரு எச்சரிக்கை இந்தப் படம். இயக்குனர் தீபா மேதா எடுத்த ரிஸ்க்-ஐ விட இது குறைவுதான்.ஆனால் சொன்னவை அனைத்தும் உண்மைகள். படத்தில் இசையும் இல்லை பாடலும் இல்லை, ஹீரோ ஹீரோயின் என்னும் பேச்சுக்கும் இடம் இல்லை. இயக்குனர் மிஷ்கின் இயக்கிய யுத்தம் செய் படத்தில் வரும் சில உண்மை விஷயங்களும் இதில் வரும். சில உண்மைகள் கொச்சையாக இருக்கும். அந்தக் கொச்சை உண்மைகளைத் திரையில் காட்டும் பொழுது கண்களை மூடிக்கொள்ளத் தோன்றும். அந்த நிலைக்கு என்னை கௌதம் ஆளாக்கிவிட்டார் என்று விமர்சனம் எழுதாமல் உண்மைகளைத் தைரியமாக திரையில் சொல்லிய கௌதமிற்கு வாழ்த்துகளே சொல்லுவேன். திரையில் பார்க்க வேண்டும் என்று வற்புறுத்தவில்லை, இது ஒரு செய்தி, விசித்திரமான செய்திகள் அனைத்தையும் சம்பவம் முடிந்தப்பின் கேட்போம். ஏதோ சில நிமிடங்கள் அதனைப் பற்றி யோசித்துவிட்டு மறந்து விடுவோம், ஆனால் நடந்த அந்தச் சம்பவத்தை நேரடியாக பார்த்திருந்தால் எப்படி இருக்குமோ அதுவே இப்படத்தில் வரும் காட்சிகள்.எங்கு பார்த்தாலும் தகும் ஆனால்பாருங்கள், உலகத்தில் என்ன நடந்துக்கொண்டிருக்கிறது என்று.
