
அன்பிற்குரிய வினோத்குமார் சுப்ரமணியம் அவர்களின் கருத்திற்கு நன்றி. "அவன் படைப்பு மக்கள் ரசனைக்கு ஏற்றார்போல் இல்லை அல்லது இவன் ரசனைக்கு மக்கள் வரவில்லை இந்த இடத்தில்தான் கலைஞனின் ஆறாம் அறிவு வேலை செய்ய வேண்டும்தாம் ரசித்த மேன்மையான விஷயத்தை ஜன ரஞ்சக மக்களுக்கு எப்படி வழங்க வேண்டும் என்பதை தெரிந்து வைத்திருக்க வேண்டும்" - இது தங்களின் முழுமைக் கருத்தாக இருத்தல் கண்டேன். வாஸ்தவம்தான். ஆனால் இக்கருத்தையொட்டி என்னுள் இன்னும் பல கேள்விகள் எழும்புகின்றன. அப்படி இந்த இயக்குனர் உலக தரத்திர்க்கு ஒரு படத்தை இயக்கி, அந்த படம் மக்கள் ரசனைக்கு இல்லாமல் தோல்வியுற்றால் வேதனையாக இல்லையா? ஜன ரஞ்சக மக்களுக்கு வில்லு, குருவி போன்ற படங்கள் தான் நல்ல சமர்பனமேயானால், நல்ல இயக்குனர்கள் பொட்டி படுக்கைகளைத் தூக்கிக் கொண்டு கோடம்பாக்கம் செல்ல வேண்டியதுதான். அனைத்து நல்ல படத்திற்கும் வரவேற்ப்பு கிடைக்கவில்லை என்று என்னால் கூற இயலாது காரணம் பருத்தி வீரன், சுப்ரமணியபுரம், அன்பே சிவம் போன்ற நல்ல படங்களுக்கு சிறந்த வரவேற்ப்பு கொடுத்தார்கள் ரசிகர்கள். ஆனால் இன்னும் தரமாக எடுக்கப்பட்ட ஹே ராம், இருவர் போன்ற படத்திற்கு சிறந்த அங்கிகாரம் கிடைக்காது ஏன்? இப்படியே விட்டால் நமது தமிழ் திரைப்படங்கள் நாட்டுக்குள்ளேயே 'தமிழ் பிலம்பேர் விருது'-ஐ(Filmfare Awards) மட்டும் வாங்கிக்கொண்டு இருக்க வேண்டியதுதான். கடந்த 75 வருட சினிமா சரித்திரத்தில் ஏதேனும் தமிழ் படத்திற்கு ஆஸ்கர்( Oscar ) அல்லது கோல்டன் க்ளோப்(Golden Globe) விருது கிடைத்ததாக நினைவில் வருகிறதா? சில நேரங்களில் மக்கள் இயக்குனர்களை விட அறிவாளித்தனமாக யோசிப்பது சந்தோசம் ஆனால் ஆஸ்கார் விருது பெற்ற எமரோஸ் ச்பெரோஸ்(Emeros Speros) படத்தின் மருப்படப்பிடிப்பு தமிழில் ஆயுத எழுத்து படத்தையொட்டி மக்களின் அறிவாளித்தனம் எங்கே போயிற்று? தமிழ் படம் கண்ணீர் சிந்த வேண்டுமா அல்லது சரித்திரம் படைக்க வேண்டுமா?
-பரதன்-