Monday, December 24, 2012

அலெக்ஸாண்டர் க்ரஹாம் பெல்-கு நன்றி (கற்பனை)




பெண்கள் அழகுதான், ஆனால் அனைத்து ஆண்களையும் கவர்வதில்லை. பார்த்தவுடன் கவர்வது என்னை பொறுத்த வரையில் காதலும் இல்லை. அனால் என்னமோ தெரியவில்லை, நடந்தது எனக்கு. அவளே வந்து பேசினால், பேசினேன். தொடர்ந்தது இந்தப் பேச்சுப் பயணம். இந்தப் பேச்சுக்கிடையில் உள்ள புரிந்துணர்வு யாரிடமும் நான் அனுபவிக்காததொன்று. கொஞ்சமாக ஆரம்பித்த உரையாடல்கள்... ம்ம்ம் ஒரு காவியம் எழுதும் அளவுக்கடிமையானது எம்மனம். ஒரு நாள் சாலையை கடக்கப் பிடித்த அவளது கரங்களை, வாழ்நாள் முழுதும் பிடித்திருக்க வேண்டும் என ஆசை இருந்தது. என்னை தப்பாக நினைக்கக் கூடாது, ஏனென்றால் சாலையை கடந்தவுடன் விட்டுவிட்டேன் அவளது கரங்களை. அனால் அவள் என் கரங்களை பிடித்திருந்த விதம், அவளும் இதைதான் எதிர்பார்த்திருப்பாலோ என எண்ணிக்கொண்டே, சாலை ஓரம் நடந்துக்கொண்டிருந்தோம். மழை பெய்தது. அருகில் சுட சுட சோளம் விற்றுக் கொண்டிருந்தார் ஒருத்தர். ஒரு கப் உதிரி சோளம் வாங்கிக்கொண்டு பேருந்து நிறுத்தும் இடத்தில் அமர்ந்தோம். அன்றுதான் அவளை கடைசியாக பார்ப்பேனோ என்று எனக்குள் ஒரு கேல்வி. பேருந்து வந்ததும் அவளது ஊருக்கு போகும் நாள் அது. " சோளம் share பண்ணிக்கலாமா?" என்று கேட்டாள். சரி என்று கூறி நானும் சாப்பிட்டேன். " சோளம் மட்டும் தானா?" என்று கேட்டாள். ஹா! இது போதும் எனக்கு. தைரியமாக பேசினேன். வெற்றி. நான் கேட்க்க வேண்டிய கேள்வியை அவள் கேட்டதில் எனக்கு ஒரு வியப்பு. நான் கேட்காதது அவள் மேல் நான் வைத்திருந்த மரியாதை. அவள் கேட்டது, சிவப்பு நிறத்தில் நான் எழுதியிருப்பதை அவளும் நினைத்திருந்தாள், அவள் பானையில். பிறகு சென்று விட்டாள் அவளது ஊருக்கு. இங்கிருந்து 2 மணி நேர தொலைவில் உள்ள அவளது வீட்டுக்கு 2 மாதம் கழித்துச் சென்றேன். அவளது பெற்றோர்களிடம் அனைத்து விஷயங்களையும் சொல்லிவிட்டு சம்மதம் பெற்றேன். ஏன் அவள் அவ்வளவு அக்கறையுடனும் பணிவுடனும் சந்தோஷமாகவும் அழகாகவும் நல்லுள்ளம் உடையவளாக இருக்கிறாள் என்று அவளது பெற்றோரைப் பார்த்துத் தெரிந்துக் கொண்டேன். தூரம் இருக்கிறாள். மனதளவில் அருகிளிருக்கிறாள். அவளோடு தொடர்புக்கொள்ள தொடர்புலகின் தந்தை அலெக்ஸாண்டர் க்ரஹாம் பெல்-கு நன்றி...

படைப்பு : பரதன் 

Monday, February 28, 2011

நடுநிசி நாய்கள் - பார்த்தவை அனைத்தும் உண்மைகள்


கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கிய நடுநிசி நாய்கள் என்னும் புதிய திரைப்படத்தைக் கண்டேன். பார்ப்பதற்கு முன் அப்படத்தைப் பற்றி நிறைய தப்பான விமர்சனங்கள், செய்திகளைப் படித்தேன், கேட்டேன். படம் பதினெட்டு வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு

உகந்தது என்றும்அறிந்தேன். படத்தின் முதல் இரண்டு நிமிடங்கள் என்னைக் கவர்ந்தது. முதல் விஷயம் படத்தின் ஒளிப்பதிவு, இரண்டாவது இசையே இல்லாமல் இயற்கை சப்தங்களை மட்டும் கொண்டு காண்பித்த விதம். படத்தில் அறவே இசையே கிடையாது என்று எனக்கு ஏற்கனவே தெரியும். இருந்தாலும் கண்டிப்பாக எதாவது ஒரு விதத்தில் வரும் என்று நம்பிக்கையுடன் இருந்தேன். என் நம்பிக்கையை வீணடித்தார் கௌதம். அடுத்து அரை மணி நேரத்தில் நான் பார்த்தவை அனைத்தும் விமர்சனங்களில் சொன்னவை உண்மைதானோ என்று நினைத்தேன்.ஆனால் பார்த்தவை அனைத்தும் உண்மைகள். சமீபத்தில் முன்பு பழகிய ஒரு நண்பரை சந்தித்தேன்.


அவர் ஒரு குறும்படத்தை தயாரித்துள்ளார். அதனைப் பார்த்துவிட்டு ஏன்

இப்படி ஒரு கருத்தைக் கொண்டு இயக்கிநீர்கள் என்று கேட்டேன். அதற்கு அவர் இது ஒரு உண்மை சம்பவம், நேரடியாக பாதிக்கப்பட்ட அந்தப்பையனை நேர்காணல் செய்ய எனக்கு வாய்ப்பு கிடைத்தது. அந்த ஒரு தாக்கத்தில் இயக்கிய படம்தான் ன்று சொன்னார். அதாவது சொந்த தந்தையே தன் மகனைப் பாலியல் பலாகாரத்திற்கு ஆழ்த்தியது. மலேசியாவில் இருக்கும் நமக்கே இப்படியெல்லாம் நடக்கிறதா என்று கேள்வி எழும் பொழுது இந்தியாவில் ஏன் உலகமெங்கும் பாலியல் பலாக்காரம் நடக்கும் நாட்டின் பத்திரிக்கைகளைப் புரட்டிப் பார்த்தால் எப்படி திகைப்பாகவும் ஏற்றுக்கொள்ள முடியாத மனப்புழக்கம் வருமோ அந்த நிலைக்கு நான் ஆளானேன் நடுநிசி நாய்களைப் பார்த்து. ஆனால்பார்த்தவை அனைத்தும் உண்மைகள்.

ராமன் ராகவின் பயங்கரம், போக்டன் மற்றும் மாரியஸ் நேஜ்லோவேணு செய்திகள், மார்ஷல் மட்சியல் இன்னும் பல நம்ப முடியாத செய்திகள் உள்ளன. இதைப் போன்று ஓர் உண்மை சம்பவ கதைதான் இது. ஒரு மனிதன் கெட்டவன் ஆவதும் பைத்தியம் ஆவதும் சில தாக்குதல்களால்தான். அது எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். பெரியோர்கள் செய்யும் தவறுகளால் சிறுவர்கள் பாதிப்படையும் கதையே இது. தப்பு செய்யும் பெரியோர்களுக்கு ஒரு எச்சரிக்கை இந்தப் படம். இயக்குனர் தீபா மேதா எடுத்த ரிஸ்க்-ஐ விட இது குறைவுதான்.ஆனால் சொன்னவை அனைத்தும் உண்மைகள். படத்தில் இசையும் இல்லை பாடலும் இல்லை, ஹீரோ ஹீரோயின் என்னும் பேச்சுக்கும் இடம் இல்லை. இயக்குனர் மிஷ்கின் இயக்கிய யுத்தம் செய் படத்தில் வரும் சில உண்மை விஷயங்களும் இதில் வரும். சில உண்மைகள் கொச்சையாக இருக்கும். அந்தக் கொச்சை உண்மைகளைத் திரையில் காட்டும் பொழுது கண்களை மூடிக்கொள்ளத் தோன்றும். அந்த நிலைக்கு என்னை கௌதம் ஆளாக்கிவிட்டார் என்று விமர்சனம் எழுதாமல் உண்மைகளைத் தைரியமாக திரையில் சொல்லிய கௌதமிற்கு வாழ்த்துகளே சொல்லுவேன். திரையில் பார்க்க வேண்டும் என்று வற்புறுத்தவில்லை, இது ஒரு செய்தி, விசித்திரமான செய்திகள் அனைத்தையும் சம்பவம் முடிந்தப்பின் கேட்போம். ஏதோ சில நிமிடங்கள் அதனைப் பற்றி யோசித்துவிட்டு மறந்து விடுவோம், ஆனால் நடந்த அந்தச் சம்பவத்தை நேரடியாக பார்த்திருந்தால் எப்படி இருக்குமோ அதுவே இப்படத்தில் வரும் காட்சிகள்.எங்கு பார்த்தாலும் தகும் ஆனால்பாருங்கள், உலகத்தில் என்ன நடந்துக்கொண்டிருக்கிறது என்று.


Monday, April 26, 2010

மறைமுகம்


மின்னல் ஒன்று என் மார்பில் மெதுவாக சாய்ந்தனுதே ...
வெட்கம் கொண்டு என் கண்களில் கார்மேகம் தொன்றிட்டதே ...
ஆனாலும் என் கால்கள் அறியாமலே பூக்கள் மேல் அடிவைத்ததேனோ ...?
சொல்லாமல் கொள்ளாமல் புலம்பாமலே தேனிக்கள் சினம் கொண்டதேனோ...?
பூக்களின் தேன் எல்லாம் என் பாதம் சுவைத்திட்டதோ...?


கண்ணின் மேகங்கள் மின்னலைப் பார்த்து கன்னத்தின் வழியாய் உதட்டினை அடைந்தது ...
மின்னல் கார்மேகம் வருவதைக் கண்டு கொஞ்சம் ஏற்றமாய் உதட்டினைத் தொட்டது...


என்ன நடந்திடுமோ வானும் மின்னும் ஒன்றுடன் சேர ...?
மழை பொழிந்திடுமோ நாவின் நரம்புகள் சாரலை நாட ...?


இனி கண்கள்தான் என்ன செய்யுமோ ...?
இரு உதடும் மழையினைக் காக்க
கண்கள் மூடி இதம் குளிரினை மீட்க்க

முட்கள் மலரோடு இருந்திட்டல் காலம் இனி ஒரு கணம் கூட தொடராது என்றேன்...
தேன் மலரோடு இருந்திட்டல் நேரம் இனி தேனே மலராக மாறிடும் என்றேன்...

கண்கள் திறந்துவிட்டேன், நீ நிறம் மாறும் முன்பே நித்தம் நித்தம் ரசித்திட ...
கைகள் முட்கலடி, உன்னை அறைவனைக்கும் முன்னாள் தேனிக்கு பதில் சொல்ல ...

வழிவிடுமோ கற்பனைகள் ...?
உனது இலைகள் என் கரங்களைப் பிடித்தன...
முட்களை உதறிவிட்டு என்னை கைப்பற்றிச் சென்றன...


| பரதன்

Friday, August 28, 2009

நீ வருவாய் என...


பிறந்துவிட்டேன் இவ்வுலகில்; படைத்ததோ இருவர்;
கண் சாய்ந்த நேரத்தில் மறைந்துவிட்டார் ஒருவர்,
இறைவன் படைத்த மிகப்பெரிய தவறு-மனது-இனால்
ஏற்றுக்கொள்ள முடியாமல் கதறி அழுகிறது...


பிறந்தவர் இறப்பதும்; இறப்பவர் பிறப்பதும்;
ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும் என்பது நியதியாயிற்று,
கூறியதோ கீதையில் - ஓர் உயிர் எழுதிய உயிரில்லா வாசகம்,
அவ்வுயிருக்கும் எனக்கும் வித்தியாசமுண்டு...


முழுமை அன்பு வைத்திருப்போர் இவ்வுலகில் இருந்தும்,
பிரிந்திருப்பதை ஓரளவு ஏற்றுக்கொள்ளலாம்...
இறந்து உடன் இருப்பது ஏற்றுக்கொள்ளலாகாது,
நிகழ்ந்தது எமது வாழ்கையில்...


நல்லதோர் வீணை செய்தேன்...
அதை நலங்கெட புழுதியில் எறிவதுண்டோ...
சொல்லடி சிவசக்தி, எனது தந்தையின் நல்லுயிரை எம்மைவிட்டுப்
பறித்துச் சென்றது என்?


இதுவரை பார்க்கா சொந்தம் கூடியிருந்த அந்நாள்,
இன்னும் என் கண்முன்...தேவையில்லை எனக்கு...
நுனியளவு சிரிப்புப் புன்னகையோடு, என் தலையை தடவி,
ஐயா என செல்லமாய் அழைக்கும் அந்த உயிர் வேண்டும்...


கடைசி மூச்சை உணர்ந்து, கைப்பற்றி அழுது, எண்ணெய் தடவி,
அரிசி போட்டு, மொட்டை அடித்து கழுவிவிட்டேன்...
எனது பக்கத்தில் அமர்ந்து தொடர்ந்து பார்கிராயே,
உன்னை தொட முடியாமல் கசியும் மனதுதிரத்திர்க்கு மருந்தில்லை...


அவளது மஞ்சள் முக மலர்ச்சி, சிவப்பு வர்ணப்புடவை,
வளையல்கள் நிறைந்த கைகள், மகாலக்ஷ்மி வந்தது போல் இருக்கும்,
எனது அன்னையின் வரவு கறுப்புப் புள்ளியோடு முடிவடைந்தது,
நீர் இல்லா காரணத்திற்காக...


சொந்த இள கனவில், கண் சாய்ந்த நொடியில்,
முகப்பரு வலிக்க சாய்ந்திருந்த உனது மடிகள்,
உடல் வலிக்க மண்ணுக்குள், உம் படத்தை கையிலேந்தி,
சமர்பித்தேன் கண்ணீர்களை உரமாக...


உமது பாதம் பதித்த பயணத்தை பார்த்த நான் இப்போது
பயணிக்கிறேன் நீ இல்லாமல்...ஆனால் ஒரு கால் குறைகிறது...
போகும்போது கண்டிப்பாக எண்ணெய் எதிர்பார்த்திருப்பாய்...
நான் உன் அருகில் இல்லாதது பெருங்காயம்...


இன்னமும் வீட்டில் உள்தாப்பா போடா உறங்குகிறேன்...
நீ வருவாய் என....

Friday, June 26, 2009

அப்பா


சிறு வயது ஞாபகங்கள் என்னை தளவியது...

நாள்தோறும் உமது கையில் இருக்கும் ரோமங்களை தடவிப் பார்ப்பதே எமது வேலை...

எனது குட்டி கை விரல்கலை முகர்ந்து பார்ப்பது உமது வேலையாயிற்று...

உமது மார்பில் படுத்து உறங்கிய நினைவுகள்...

இப்போதும் என் தலையணையை அலுத்திபிடித்துக் கொண்டு நினைத்திருப்பேன்...

ரீங்கார தொலைப்பேசி மூலம் தகவல் கொடுத்து காத்திருப்பேன்...

வேலை முடிந்து வரும் பொழுது உணவுகள் ஏதும் வாங்கி வருவார் என்று...

தாமதமாகி விட்டதன் மூலம் உறங்கி விடும் எமது விழிகள்....

மோட்டார் சப்தம் செவியை துளைத்ததும் விழித்த கண்கள் தேடும் உன் முகம் எங்கே என்று...

நினைவு தெரிந்த நாள் முதல் அடித்ததில்லை உமது கரங்கள் என்னை...

எல்லாம் செய்து கொடுத்தீர்...உம்மை விட்டு மூன்று வருடம் பிரிய வேண்டிய சூழ்நிலை...

உன்னை நினைக்கா நாளில்லை...

அங்கேயும் அப்டித்தான் என்று நான் அறிவேன்...

திடுக்கிட்டது ஒரு நாள்...

அந்த சம்பவம் என் வாழ்வில் மறக்க முடியாதது...

உம்மை பிரிந்து விடுவேனோ என்று என் உள்ளம் கேட்டது...

வேண்டாத தெய்வமில்லை...

நீர் என்னை கண் விளித்து பார்த்தும்...எனக்கு உயிர் வந்தது...

சிரித்தேன்...மகிழ்ந்தேன்...

பொறுக்கவில்லை அவனுக்கு......

மறுபடியும் இன்னொரு கண்டம்...

கடைசியாக உமக்கு முத்தம் தந்து பிரிந்த ஞாபகம் கண்முன் நினைவுகள்...

வேண்டுகிறேன் இறைவனை...

நீர் என் வாழ்வில் கடைசி வரை இருக்க வேண்டுமென்று...

நீர் இல்லாத வாழ்கையை நினைத்து பார்க்க முடியவில்லை...

இதுவரை என்னை சந்தோஷப்படுத்திவிட்டு... கலங்க்கப்படுத்திவிடாதீர்கள்...
நினைவில் அல்ல... நிஜத்தில் இருக்க வேண்டும்... என்றும் என்னுடன்... அப்பா...


~பரதன்~

Sunday, June 14, 2009

வாமணன் - ஒரு தேவதை


ஒரு தேவதை பார்க்கும் நேரமிது...

மிக அருகினில் இருந்தும் தூரமிது...

இதயமே...இவளிடம்...உருகுதே...


இந்த காதல் நினைவுகள் தாங்காதே...

அது தூங்கும் போதிலும் தூங்காதே...
பார்க்காதே ...என்றாலும்...கேட்காதே...


என்னை என்ன செய்தாய் பெண்ணே...

நேரம் காலம் மறந்தேனே...

கால்கள் இரண்டும் தரையில் இருந்தும்...

வானில் பறக்கிறேன்...


என்ன ஆகிறான்...

எனக்கு போகிறேன்...

வழிகள் தெரிந்தும் தொலைந்து போகிறேன்...


காதல் என்றால்...பொல்லாதது...புரிகின்றது...


கண்கள் இருக்கும் காரணம் என்ன...

என்னை நானே கேட்டேனே...

உனது அழகை காணத்தானே...

கண்கள் வாழுதே...



மரண நேரத்தில்...உன் மடியின் ஓரத்தில்...

இடமும் கிடைத்தால் இறந்தும் வாழுவேன்...



உன் பாதத்தில்...முடிகின்றதே...என் சாலைகள்...



இந்த காதல் நினைவுகள் தாங்காதே...

அது தூங்கும் போதிலும் தூங்காதே...


ஒரு தேவதை பார்க்கும் நேரமிது...

மிக அருகினில் இருந்தும் தூரமிது......

Tuesday, May 26, 2009

காகித ஆட்சி




பிறந்த இடம் அறிவோம்,
பிறந்ததினால் அழியும் இடம் அறியாது,
அழிந்தப்பின் போகும் இடம் புரியாது.



பிறப்புக்கும் இறப்புக்கும் இடையில் ஒரு வாழ்கை,

ஆசைப்படும் வாழ்க்கை அல்ல,

கட்டாய வாழ்கை.


அருகினில் இருக்கும் உனது பெற்றோர், உறவினர், நண்பர், மனைவி, பிள்ளை...

இத்தனையும் தாண்டி ஓர் உறவை நீ தேடுவாய்,

நீ வசிக்கும் இடத்தில் பல வித குறைகள் இருப்பதை நீ அறிவாய்...



பிறந்தோம், படித்தோம், பணம் எடுத்தோம், சாதித்தோம், இறந்தோம்...

அனைத்திலும் பங்கெடுத்த நீ, உன்னை மறந்தாய் என்பதே உண்மை...

புரியவில்லை?


எழுந்தாயா, குளித்தாயா, உண்டாயா, சில பல கடமைகளையும்
கட்டாயங்களையும் செய்தாயா, மறுபடியும் உறங்கும் நீ செய்யும் அத்துனை
விஷயங்களும் உன் உடலுக்காகவும், அடுத்த நிமிஷ வாழ்க்கைக்காகவும்,
மற்றோருக்கும் செய்கிறாய் ஒழிய உனது மனதிற்கு செய்ய மறந்தாய்
என்பதை சொல்கிறேன்...


இத்தனை நாட்களாய் வாழ்கிறாயே...ஒன்றினை உணர்ந்தாயா?
பணத்தை படைத்ததினால் தானே நீ இவ்வளவு கஷ்டப்படுகிறாய்...என்பதை...
உனது வாழ்க்கையை கட்டாயப்படுத்தி விட்டது ஒரு காகிதம்...


ஒவ்வொரு நிமிடமும் வாழ்கிறாயா என்பதை சிந்தனை செய்?
என்று நீ சுவாசிப்பதை ரசிக்கிராயோ...அந்த ஒரு நொடிகளாவது
வாழ்ந்திருக்கிறாய் என்ற சந்தோஷம் கிட்டட்டும்...


~பரதன்~