Monday, December 24, 2012

அலெக்ஸாண்டர் க்ரஹாம் பெல்-கு நன்றி (கற்பனை)




பெண்கள் அழகுதான், ஆனால் அனைத்து ஆண்களையும் கவர்வதில்லை. பார்த்தவுடன் கவர்வது என்னை பொறுத்த வரையில் காதலும் இல்லை. அனால் என்னமோ தெரியவில்லை, நடந்தது எனக்கு. அவளே வந்து பேசினால், பேசினேன். தொடர்ந்தது இந்தப் பேச்சுப் பயணம். இந்தப் பேச்சுக்கிடையில் உள்ள புரிந்துணர்வு யாரிடமும் நான் அனுபவிக்காததொன்று. கொஞ்சமாக ஆரம்பித்த உரையாடல்கள்... ம்ம்ம் ஒரு காவியம் எழுதும் அளவுக்கடிமையானது எம்மனம். ஒரு நாள் சாலையை கடக்கப் பிடித்த அவளது கரங்களை, வாழ்நாள் முழுதும் பிடித்திருக்க வேண்டும் என ஆசை இருந்தது. என்னை தப்பாக நினைக்கக் கூடாது, ஏனென்றால் சாலையை கடந்தவுடன் விட்டுவிட்டேன் அவளது கரங்களை. அனால் அவள் என் கரங்களை பிடித்திருந்த விதம், அவளும் இதைதான் எதிர்பார்த்திருப்பாலோ என எண்ணிக்கொண்டே, சாலை ஓரம் நடந்துக்கொண்டிருந்தோம். மழை பெய்தது. அருகில் சுட சுட சோளம் விற்றுக் கொண்டிருந்தார் ஒருத்தர். ஒரு கப் உதிரி சோளம் வாங்கிக்கொண்டு பேருந்து நிறுத்தும் இடத்தில் அமர்ந்தோம். அன்றுதான் அவளை கடைசியாக பார்ப்பேனோ என்று எனக்குள் ஒரு கேல்வி. பேருந்து வந்ததும் அவளது ஊருக்கு போகும் நாள் அது. " சோளம் share பண்ணிக்கலாமா?" என்று கேட்டாள். சரி என்று கூறி நானும் சாப்பிட்டேன். " சோளம் மட்டும் தானா?" என்று கேட்டாள். ஹா! இது போதும் எனக்கு. தைரியமாக பேசினேன். வெற்றி. நான் கேட்க்க வேண்டிய கேள்வியை அவள் கேட்டதில் எனக்கு ஒரு வியப்பு. நான் கேட்காதது அவள் மேல் நான் வைத்திருந்த மரியாதை. அவள் கேட்டது, சிவப்பு நிறத்தில் நான் எழுதியிருப்பதை அவளும் நினைத்திருந்தாள், அவள் பானையில். பிறகு சென்று விட்டாள் அவளது ஊருக்கு. இங்கிருந்து 2 மணி நேர தொலைவில் உள்ள அவளது வீட்டுக்கு 2 மாதம் கழித்துச் சென்றேன். அவளது பெற்றோர்களிடம் அனைத்து விஷயங்களையும் சொல்லிவிட்டு சம்மதம் பெற்றேன். ஏன் அவள் அவ்வளவு அக்கறையுடனும் பணிவுடனும் சந்தோஷமாகவும் அழகாகவும் நல்லுள்ளம் உடையவளாக இருக்கிறாள் என்று அவளது பெற்றோரைப் பார்த்துத் தெரிந்துக் கொண்டேன். தூரம் இருக்கிறாள். மனதளவில் அருகிளிருக்கிறாள். அவளோடு தொடர்புக்கொள்ள தொடர்புலகின் தந்தை அலெக்ஸாண்டர் க்ரஹாம் பெல்-கு நன்றி...

படைப்பு : பரதன்