
பெற்றோர்கள்-பிள்ளைகள்-இவர்களுக்கு இடையில் மோதல்கள் இருப்பது இயல்பு. நான் இங்கு கூறப்போவது கல்வி மற்றும் கலை ரீதியில் இவர்களுக்கு இடையில் இருக்கும் மோதல்கள். சில பெற்றோர்கள் பிள்ளைகள் தனக்கு என்ன பிடித்திரிக்கிறதோ அந்த துறையை தான் தன் பிள்ளை தேர்ந்தெடுத்து பயில வேண்டும் எண்ணம் கொண்டிருக்கிறார்கள். சில பெற்றோர்கள் பிள்ளைகள் போக்கில் விட்டு விடுவது. பிள்ளைகளும் அதே போன்றுதான். மருத்துவர், வழக்கரைன்யர், ஆசிரியர், பொறியியலாளர், தொழில்நுட்பம் என்ற துறைகள் மட்டுமே நம் இந்திய சமுதாயம் பயில வேண்டும் என்ற சட்டமா என்ன? ஏன் அவர்கள் அதையும் தாண்டி இன்னும் ஆயிரக்கணக்கான துறைகள் இருப்பதை உணர்வதில்லை. பணம் நிறைய சம்பாதிக்கலாம் என்ற பேராசையா? கவ்ரவமா? அல்லது வற்புறுத்தலா? இந்த துறைகளை மட்டும் தேர்வு செய்வது, பிறகு போட்டி அதிகமாக இருப்பதால் வாய்ப்பு கிடைக்கவில்லை என்று அரசாங்கத்தை குற்றம் கூறுவது, கைவசம் பிழைப்பதற்கு வேறு கலை ஏதும் தெரியாது, கற்றுக்கொள்ள பணம் இல்லை அல்லது வாய்ப்புகள் கிடைக்கவில்லை. கல்வியும் கலையும் ஒன்றுதான். தேவி சரஸ்வதியை கூட கல்விவாணி என்று அழைப்பதில்லை, கலைவாணி என்றுதானே அழைக்கிறார்கள். இந்த கல்வி கற்கும் சமயத்தில் கலையும் கற்கலாமே! இந்திய கலாச்சாரங்கலிலே தற்காக்க வேண்டிய கலைகள் பல இருக்கின்றன. காக்கலாமே. டேக்வாண்டோ , கராத்தே என்ற வரிசையில் எத்தனை பேர் சிலம்பம் கற்கின்றார்கள்? பரதநாட்டியத்தை விட பெல்லி, சல்சா நடனத்திற்கு மவ்ஸ் அதிகமாக இருக்கிறது. கல்வியைப் பற்றி பேசும் போது சமயல்துறை, ஒலி/ ஒளிப்பரப்பு துறை, வியாபார துறை, இசை, ஓவியம், முடி அலங்காரம், வீடு சீரமைப்பு, ஆடைகள் படைப்பு, எழுத்து, என்ற இன்னும் பல விதாமான துறைகள் இருக்கின்றன. அனைத்திலும் மற்ற இனத்தவர்கள் நன்றாக சம்பாரித்துக் கொண்டும் சாதித்தும் வருகிறார்கள். ஏன் நம் இந்தியர்களுக்கு மட்டும் இது தோன்றவில்லை? இப்படியே மற்றவர்களை குற்றம் கூறிக்கொண்டு, மதுபானம் அருந்திக்கொண்டு, புகைப்பிடித்துக்கொண்டு வாய்ப்பு இல்லை என்று வேலைக்கு போகாமல் இருந்தால், மறுபடியும் ஐந்து பேர் ISA-வில் உள்ளே செல்ல வேண்டியதுதான். முதலில் உன் வழியும் சிந்தனை விழியும் சரியாக இருக்கிறதா என்று பார், பிறகு மற்றவர்களை கூறலாம் குற்றம். நேரத்தை செலவழிக்க வேண்டாம். படிங்க, எதுவெல்லாம் இருக்கோ அனைத்தையும் படிங்க,கத்துக்குங்க, கலைகளை எல்லாம் கத்துக்குங்க. இந்த இந்திய சமுதாயம் வெற்றியடைய இது ஒன்றுதான் வழி.