
மின்னல் ஒன்று என் மார்பில் மெதுவாக சாய்ந்தனுதே ...
வெட்கம் கொண்டு என் கண்களில் கார்மேகம் தொன்றிட்டதே ...
ஆனாலும் என் கால்கள் அறியாமலே பூக்கள் மேல் அடிவைத்ததேனோ ...?
சொல்லாமல் கொள்ளாமல் புலம்பாமலே தேனிக்கள் சினம் கொண்டதேனோ...?
பூக்களின் தேன் எல்லாம் என் பாதம் சுவைத்திட்டதோ...?
கண்ணின் மேகங்கள் மின்னலைப் பார்த்து கன்னத்தின் வழியாய் உதட்டினை அடைந்தது ...
மின்னல் கார்மேகம் வருவதைக் கண்டு கொஞ்சம் ஏற்றமாய் உதட்டினைத் தொட்டது...
என்ன நடந்திடுமோ வானும் மின்னும் ஒன்றுடன் சேர ...?
மழை பொழிந்திடுமோ நாவின் நரம்புகள் சாரலை நாட ...?
இனி கண்கள்தான் என்ன செய்யுமோ ...?
இரு உதடும் மழையினைக் காக்க
கண்கள் மூடி இதம் குளிரினை மீட்க்க
முட்கள் மலரோடு இருந்திட்டல் காலம் இனி ஒரு கணம் கூட தொடராது என்றேன்...
தேன் மலரோடு இருந்திட்டல் நேரம் இனி தேனே மலராக மாறிடும் என்றேன்...
கண்கள் திறந்துவிட்டேன், நீ நிறம் மாறும் முன்பே நித்தம் நித்தம் ரசித்திட ...
கைகள் முட்கலடி, உன்னை அறைவனைக்கும் முன்னாள் தேனிக்கு பதில் சொல்ல ...
வழிவிடுமோ கற்பனைகள் ...?
உனது இலைகள் என் கரங்களைப் பிடித்தன...
முட்களை உதறிவிட்டு என்னை கைப்பற்றிச் சென்றன...
| பரதன்
4 comments:
'கண்கள் திறந்துவிட்டேன், நீ நிறம் மாறும் முன்பே நித்தம் நித்தம் ரசித்திட'... அருமையான வரிகள்.
மேலும் அற்புதமான கவிதைகள் மலர எனது வாழ்த்துக்கள் =)
நன்றி... கண்டிப்பா.... :)
பல முறை படித்தப் பிறகும்... உங்களின் துணை கொண்டே... இந்த கவிதையின் பொருளை தெரிந்துக் கொண்டேன். பொருள் அறிந்த பிறகு.... அருமை... 'என்ன நடந்திடுமோ வானும் மின்னும் ஒன்றுடன் சேர ...?' 'மழை பொழிந்திடுமோ நாவின் நரம்புகள் சாரலை நாட ...?' 'வழிவிடுமோ கற்பனைகள் ...? உனது இலைகள் என் கரங்களைப் பிடித்தன...முட்களை உதறிவிட்டு என்னை கைப்பற்றிச் சென்றன...' எனக்கு பிடித்தவைகள். நல்லதொரு கற்பனை. தொடருங்கள்.... :)
நன்றி அண்ணா... உங்கள் ஆசி இருக்கும் வரை தொடருவேன்... நன்றி
Post a Comment