Friday, April 17, 2009

எனக்குப் பிடித்தது....


....அமைதியான சூழ்நிலையில் படிக்க....



காலை கதிர் சூரியன்...

சூரிய ஒளி வீட்சை காட்டும் பனி...

மலர்ந்த பூக்கள்...

காற்றடித்துச் செல்லும் காய்ந்த இலைகள்...

அமைதியான வேளையில் குயிலின் கானம்...

முத்தாகத் தூறும் மழை... அதன் சாரல்...சூடான காப்பி...

ஓய்ந்தப்பின் ஒழுகும் நீர் துளிகள்...

அதன் சப்தம்...

மாலை வெயில் மறைவு...

அந்நேரத்தின் வானின் நிறம்...கதவோரம் ரசித்தபடி டீ...

குளக்கரை ஓரம் தென்னை மரத்தின் சாய்ந்தபடி... பௌர்ணமி நிலவு... பாரதியார் கவிதை...

தூரத்திலிருந்து கேட்கும் ஆலய மணி ஓசை...

மசூதியின் அமைதி...

சாந்தி மந்திரம்...

அழகிய கோலங்கள்...

வயற்காடு...மண்வாசனை...

மலையடிவாரம்...சில்லென்ற காற்றோடு எனக்கு பிடித்த பாடல்கள்...

குழந்தைகளின் சிரிப்பு...அந்த சிறு உதட்டு முத்தம்...

பெண்ணிடும் கண்மை...அழகிய கண்...

கூர்ந்த மூக்கு...குறும்பு சில்மிஷங்கள்...

காற்றிலாடும் காதோர முடி...சிறு ரோமம் கொண்ட காதுகள்...

பாவாடை தாவணியில் அழகிய கால் கொலுசுகள்...வர்ண வளையல்கள்...வெட்கம்

மார்கழி குளிர்...விசிறி...சிலம்பாட்டச் சத்தம்...ஜன்னலோர தூக்கம்...

வெள்ளை நிறம்...கருப்பு....

கம்பீரத் தோற்றம்...வாசனை...

இருட்டறையில் இயற்கை வெளிட்சம்...

இசை...மெல்லிசை... ஒவ்வொரு வாத்தியங்களின் சிறந்த ஒலி...

சைவ உணவு...கோவில் சாதம்...

நட்பு பேட்சு...

தந்தையின் அரவணைப்பு...

எல்லாம் அடங்கிய தாயின் மடி...


....இன்னும் இருக்கு....

6 comments:

Sathis Kumar said...

அன்பின் பரதன்,

'வலைப்பூங்கா'வில் தங்களின் வலைப்பதிவு செய்தியோடையை பெற முடியவில்லை. தடங்கலுக்கு மன்னிக்கவும்.

அன்புடன்,
கி.சதீசு குமார்

Anonymous said...

its unlimited .
anyhow my best wishes for yr desirability tat has come true and
for coming ones.

subaguna said...

vanakkam friend. Im thana's friend. I read your blog accidently.. Really nice and creative. Unggalin oothubatthi sirukathai migavum arumai. Nam samuthayatthin indraya siruvargalin nilamaiyai yeduthuraikkum vagaiyil ullathu. Keep up your work. Well done..!!

வினோத்குமார் said...

அழகு !!

தொடருங்கள் !

வினோத்குமார் said...

அழகு !!

தொடருங்கள் !

JO said...

௨ங்களையும், உங்கள் கற்பனைகளையும் திறமைகளையும் வர்ணிக்க எனக்கு ஒரு பிரவி போதாது... அடியேன் தங்களின் வாழ்நாள் ரசிகை :-)