
கோலாலம்பூரின் வாழ்க்கை பரபரப்பாகவும் கடினமாகவும் இருப்பது இயல்பு. ஒரு நாள் வேலை சென்று வந்தாலே சோர்ந்து விடும் உடம்பு. அப்படிப்பட்ட உஷ்ணமும் நெரிச்சளும் கொண்ட இத்தலைநகரத்தில் பல விதமான தோரணையைக் கொண்ட மனிதர்கள், பிரச்சனைகள், கூத்துக் கொண்டாட்டம் என்று அடுக்கிக் கொண்டே போகலாம். ஆனால் இத்தகைய விஷயங்கள் நமக்கு ஏதாவது ஒரு பாடத்தை நமது வாழ்வில் கற்பித்து விட்டுதான் செல்கின்றன. எனக்கும் அப்படித்தான்; சிந்திக்கச் செய்தது ஒரு சனிக்கிழமை. தற்போதிய காலத்தில் சனிக்கிழமை இரவு பப்புக்குப் போகும் இளையர்களுக்கு மத்தியில், ப்ரிக்பில்லில் இரவு உணவை ருசித்துக்கொண்டு நிலவை ரசிப்போம் எங்களது கூட்டம். பிறப்பிடம் வேரூர்தான், கல்விக்காகவும், வேலைக்காகவும் இங்கு அடைய வேண்டிய சூழ்நிலை.
நான், எனது உடன் பயிலும் மாணவன் (தம்பி), கல்வியை முடித்துவிட்டு வேலைக்குச் செல்லும் மற்றொருவர் (அண்ணன்), மூவரும் ஒலி/ ஒளிப்பரப்பு துறையைச் சார்ந்தவர்கள். எந்நேரமும் திரையுலகையும் கலையுலகத்தைப் பற்றியும் சிந்தித்தும் விமர்சித்தும் கொண்டிருப்பவர்கள். வழக்கமாக ஒரு சனிக்கிழமை உணவருந்தச் சென்ற பொழுது, அக்கடை தங்கும் விடுதியின் பக்கத்தினில் அமைந்திருந்தது. உணவினைத் தேர்வுச் செய்தப் பிறகு, தங்கும் விடுதியின் அருகினில் ஏற்பாடுச் செய்யப்பட்டிருந்த நாற்காலிகளில் அமர்ந்தோம். எனக்கு எதிர்ப்புறத்தில் அமர்ந்திருந்த தம்பி, எனது பின் திசையில் யாரையோக் கண்டுச் சிரிப்பதை உணர்துத் திரும்பிப் பார்த்த பொழுது, எங்களோடு பயின்றுக் கொண்டிருக்கும் ஒருவன், தங்கும் விடுதியை விட்டு வெளியேறி எங்களைப் பார்த்தப்படி சிரித்துக் கொண்டிருந்தான். அவனுடன் ஒரு சீனப்பெண்ணும், இன்னும் இரண்டு இந்திய நபர்கள் உடன் இருந்தார்கள். அவன் எங்களைப் பார்த்து...
" இங்க என்னடா பன்றீங்க? "
"சாப்ட வந்தோமடா" என்றேன் நான்.
"சாப்ட வந்தோமடா" என்றேன் நான்.
தம்பி "என்னடா சீனப் பொண்ணெல்லாம் இருக்கு, என்ன கதை?" என்றான்.
திருதிருவென்று முழித்தபடி, "இல்லடா சடர்டே நைட், வேற எங்க, பப்புக்குதான்"....
என்று சொல்லிவிட்டு முளுமனதில்லாமல் எங்களையும் அழைத்தான். நான், அங்கு எந்த ஒரு சுகத்தையும் அனுபவித்ததே இல்லை, மற்றும் பழக்கப்படுத்திக்கொள்ள விரும்பவில்லை என்று கூறிவிட்டு...
" போயிட்டு வாடா , என்ஜாய் பண்ணு", என்றேன்.
கேவலம் பப்பில் அனுபவிக்கும் சுகத்தை விட,இரவில் நிலவொளியை ரசிப்பது எவ்வளவோ இதமாக இருக்கிறது மனதிற்கு. அவனோ, மௌநமாகச் சிரித்துக் கொண்டு, காரில் அவர்களை ஏற்றிக் கொண்டு புறப்பட்டான். உணவுகள் மேசைக்கு வந்தன. உணவின் சூட்டினால் கிழம்பிய ஆவி கொஞ்சம் தணிந்ததும், கரண்டியைப் பிடித்துச் சாப்பிட ஆரம்பித்தேன். திடீரென்று பக்கத்திலிருந்து ஒரு குரல்...
"வணக்கமுங்க" என்றது.
"வணக்கம்" என்று சொல்லியபடி திரும்பிப் பார்த்த பொழுது...
"வணக்கம்" என்று சொல்லியபடி திரும்பிப் பார்த்த பொழுது...
"சாப்பிடும் பொழுதுத் தொந்தரவு செய்திருந்தால் என்னை மன்னிச்சிகோங்க, இது என் பையன், படிக்கிறான்,கொஞ்ச காலமா எனக்கு ஒடம்பு சரியில்ல, அதனால வேலை இல்ல, இந்த ஊதுபத்திய வித்துதான் பொலட்சிகிட்டு இருக்கேன். எனக்கு இல்லாட்டியும், என் பையனுக்காக ஒரு பாக்சாவது வாங்கிகீங்க"...
என்று மிகவும் எளிமையான உடையை அணிந்துக் கொண்டு, கையில் பிளாஸ்டிக் பையில் ஊதுபத்திப் பெட்டிகளை சுமந்துக் கொண்டு, மற்றொருக் கையில் தனது மகனின் கையைப் பிடித்துக் கொண்டு பிச்சை எடுக்காத குறையாய்க் கெஞ்சிக் கொண்டிருந்தார் ஒரு பெரியவர். அந்த நிமிடம் நானும் தம்பியும் ஒருவரை ஒருத்தர் பார்த்துக் கொண்டு மௌனம் சாதித்தோம். அண்ணன் உடனே,...
"எங்க இருக்கீங்க?' என்றதற்கு
"இங்க செந்துள்ள இருக்கேனுங்க" என்றார் அவர்.
"உங்களுக்கு உண்மையாவே உடம்பு சரியில்லையா?", என்றுக் கேட்டார் அண்ணன்.
"நெஜமாங்க, காலு ரெண்டும் அடிக்கடி இழுத்துக்கும், ஒழுங்க நடக்க முடியாது, இல்லேனா இப்படி வேலை செஞ்சு பிளைக்கனும்னு எனக்கு என்ன தலையெழுத்தா?" என்றார் அவர்.
நான் திரும்பி தம்பியைப் பார்த்து விட்டு, மேசையில் பரிமாறப்பட்டிருக்கும் உணவைப் பார்த்தேன், உணவுச்சூட்டின் ஆவி கொஞ்சம் பறந்துக் கொண்டுதான் இருந்தது.
"மனைவி இருக்காங்களா?" என்று அண்ணன் கேட்டார்.
"இருக்காங்க, வீட்டுல இருக்காங்க, வேலை செய்யல, வீட்டோடதான் இருக்காங்க" என்று சலித்துக்கொண்டு பதிலளித்தார்.
நான் அண்ணனை நோக்கினேன். அவர் என்னைப் பார்த்துவிட்டு அந்தச் சிரியப் பையனைப் பார்த்தார். உடனே பையனின் கையைப் பிடித்து அருகினில் இழுத்து...
"எத்தன வயசு உனக்கு?" என்றதற்கு
"ஒன்பது வயது" என்றான் அச்சிறுவன்.
அண்ணனின் முகத்தில் மாற்றம் தெரிந்தது, உடனே அச்சிறுவனின் தந்தையை நோக்கி "ஏன் படிக்கிற பையன, அதுவும் ராத்திரி மணி பத்துக்கு கூட்டிகிட்டு, இந்தப் பிளைப்பு?" கேட்டதற்கு அந்தப் பெரியவர்...
"என்னங்க பன்றது, சும்மா போயிட்டு வித்தா, யாரும் நான் நிஜமாகவே உடம்பு சரியில்லாதவன், குடும்பம் இருக்கு, பிள்ளைங்க இருக்காங்கனு நம்ப மாட்ராங்க, அலட்சியமாகவும், கண்டுகாமலும், ஆத்திரமாகவும் பேசி அனுப்பிர்றாங்க. எனக்கு ஒரு பொம்பள பிள்ளை வேற இருக்குங்க. நான் படிச்சிருந்தாலும் பரவால, அதுவும் இல்ல. அந்த ஆண்டவன் தான் வழிக்காட்டனும்" என்று கவலையோடு தெரிவித்தார்.
அப்பொழுதுதான் நான் நன்றாக நிமிர்ந்து அவரது முகத்தை உற்றுப் பார்த்தேன். அவரது கண்களில் கலக்கத்தைப் பார்த்தேன். என்னதான் நடக்கிறது என்று தெரியாமல், அந்த அறியாப் பொடிச் சிறுவன் எங்களைப் பார்த்து...
"ந...ந...நல்ல ஊதுபத்தி அண்ணா, '007' பிராண்ட், இ...இ...இந்த ரெடியோவள எலாம் சொல்லுவாங்கள" என்றான்.
அவன் கூறிய அந்த வரி, என்னை கண்கலங்கச் செய்தது. எப்படிப்பட்ட சூழ்நிலையில் வாழ்ந்திருந்தால், அச்சிறுவன் அவ்வரியைக் கூறியிருப்பான். சிந்தித்தப்படி உணவைப் பார்தேன், உணவின் சூடு முழுமையாக தணிந்திருந்தது. ஆனால் என் மனது வெப்பமாகியது. உணவை நகர்த்திவிட்டு நீரை அருந்த ஆரம்பித்தேன். எனக்கு அத்தருநத்தில் என்ன சொல்வது என்றே தெரியவில்லை. அண்ணன் அவன் திக்கிப் பேசுவதைக் கேட்டவுடன்...
"எத்தனையாவது படிக்கிறீங்க ஐயா?" என்று கேட்டதற்கு
"நாலாப்பு" என்று பதில் வந்தது.
"பரிட்சையெல்லாம் முடிஞ்சிரிட்சே, என்ன மார்க் கிடச்சது?"
...என்றுக் கேட்ட கேள்விக்குச் சரியான பதில் வரவில்லை. குறிப்பாக மலாய் மொழியில் என்னே மார்க் கிடைத்தது என்று அண்ணன் கேள்விக் கேட்டார். அதற்கு அந்தப் பையன் தந்தையைப் பார்த்துவிட்டு திரும்பி அண்ணனைப் பார்த்து...
"மு...மு...மூன்று" என்றான். அந்த வேளையில் அச்சிறுவனின் முகத்தில் வெட்கத்தை கண்டேன். அண்ணன் வருத்தத்துடன் அவனது தந்தையைப் பார்த்து...
"பாருங்க, கேட்கரதுக்கே கஷ்டமா இருக்கு, பிள்ளைங்கள ஒழுங்க படிக்க வைங்க, மலை வேற வர்ற மாதிரி இருக்கு, லேட்டா ஆச்சி, இந்த நேரத்துல படிக்கிறப் பையனைக் கூட்டிகிட்டு உங்க பிளைப்புக்காக உபயோகப்படுத்துறது எனக்கு சரியாப் படல. இந்த நேரத்துக்கு அவர் படிப்பாருல..."
"இல்ல, ஸ்கூல் லீவு, அதான் கூட்டிகிட்டு வந்தேன், ஒன்டியாதன் வந்துட்டு போவேன், வரேன்னு சொன்னாரு அதான், இவரைப் பார்த்தாதான் நாளுப்பேறு இந்த ஊதுபத்திய வாங்குறாங்க" என்று அவர் மறுபதில் கொடுத்தார்.
"என்ன இருந்தாலும் உங்களோட சுயநலத்துக்காக இந்தப் பையனோட எதிர்காலத்தை வீணாக்கிக்கிட்டு இருக்கீங்க, அது அது இருக்கட்டும் எப்படி வந்தீங்க? எப்படித் திரும்பப் போவிங்க?" என்று கேள்வியை எழுப்பினார் அண்ணன்.
"வழக்கமா எல்.ஆர்.தி-ல தாங்க போவேன், இன்னிக்கும் அப்படித்தான்" என்றார் ஊதுபத்தி விற்றுப் பிழைக்கும் அந்த ஏழைக்குடிமகன்.
"பாருங்க,மழை வேற வரப்போகுது, பையனை வேற கூட்டிகிட்டு வந்துருக்கீங்க, எல்.ஆர்.டி-ல வேற போகணும், ஸ்டேஷன் வரைக்கும் நடக்கணும், கண்டிப்பா எங்க கிட்ட வியாபாரம் செஞ்ச மாதிரி இன்னும் நாலு பேரு கிட்டயாவது வியாபாரத்தை முடிச்சிட்டுதான் வீட்டுக்கு போவிங்க, இன்னும் லேட்டா ஆகும், முதல்ல வீட்டுக்கு போங்க, தயவு செஞ்சு நாளைக்கிலிருந்து உங்க மகனைக் கூட்டிகிட்டு வர்ரத நிருத்திக்கீங்க" என்றார் அண்ணன்.
மண்டையை மட்டும் ஆட்டிக் கொண்டு மகனை அவர் வசம் இழுத்தார் அப்பெரியவர்.
அண்ணன் "சாப்டியா? நான் வாங்கி தரேன் சாப்புடுரியா?" என்று கேட்டார்.
அந்தப் பையனோ திரும்பிக் கடையைப் பார்த்தபடி தனது தந்தையைப் பார்த்துவிட்டு வேண்டாம் என்று சொல்லிவிட்டான்.
அந்தப் பையனோ திரும்பிக் கடையைப் பார்த்தபடி தனது தந்தையைப் பார்த்துவிட்டு வேண்டாம் என்று சொல்லிவிட்டான்.
"உங்களுக்கு வேற ஏதாவது உதவி தேவைப்படுதா? இதான் என் காட்..இந்த நம்பருக்கு கூப்புடுங்க...எனக்கு தெரிஞ்ச பெரியவங்க கிட்ட சொல்லி உங்களுக்கு என்னால முடிஞ்ச உதவியை ஏற்பாடு பண்றேன்" என்று கூறியபடி காட்டை நீட்டினார் அண்ணன்.
அவரும் அந்தக் காட்டை வாங்கிக் கொண்டு "நன்றி" என்றுக் கூறி விடைப்பெற்றுக்கொள்ள முயன்ற போது அண்ணன் மறுபடியும்...
"பையனை கூட்டிகிட்டு வராதீங்க" ...
"பையனை கூட்டிகிட்டு வராதீங்க" ...
என்றுத் திரும்பவும் உட்சரித்தார். அதற்கு அவர் சரி என்று கூறியபடி அடுத்த மேசைக்குச் சென்றார்.அவர் ஏங்கியவாறு ஆண்டவன் அண்ணன் ரூபத்தில் வழிக்காட்டிவிட்டார் என்று நினைத்தேன் ஆனால் அவர் எப்படிப் பயன் படுத்திக்கொள்ளப் போகிறார் என்று தெரியவில்லை. அன்றொரு நாள் அனுபவம் மூலமும் கதைகளைப் படைக்கலாம் என்றுப் படித்தது ஞாபகத்திற்கு வந்ததும் நான் அண்ணனிடம்...
"அண்ணா, இந்த சம்பவத்தைக் கூட ஷாட் பிலிமா செய்யலாம்ல, எனக்கு ஒரு ஐடியா, அந்த ஷாட் பிலிம்ல கடைசியா, மழை பெஞ்சு ஓஞ்ச வாகனங்களே இல்லாத சாலையில, அவங்க ரெண்டு பெரும் விளக்குக் கம்பத்துக்கு கீழ, அப்பாவோட கையைப் புடிச்சிகிட்டு அந்தப் பையன் நடந்து போகும் போது, "அப்பா மொதல்ல அந்த அண்ணன், சாபுடுரியானு கேட்டாருல, அப்பவே சாப்புட்டுருந்துருக்கலாம்ள பா, பசிக்குது" என்று வசனம் பேசியிருந்தால் நல்ல இருக்கும்ல" என்று எனது கருத்தைக் கூறினேன். அதற்க்கு அவர்...
"அதே சிடுவேஷன்ள, அந்தப் பையன் " அப்பா, இதுக்கு மேல நான் உங்கக்கூட வரணுமா ப்பா?" என்று கேட்டால் நன்றாக இருக்கும் என்று நினைக்கிறேன்" என்று அவரதுக் கருத்தைக் கூறினார் அண்ணன்.
நிஜமாகவே நன்றாகத்தான் இருந்தது. அவரின் வயதும் அனுபவமும் அப்படி என்றுப் புரிந்துக்கொண்டு சிரித்தேன் நான். அந்த ஊதுபத்திக்கும், அப்பையனுக்கும் வித்தியாசம் இல்லை என்று எனக்கு தோணிற்று. அவனது எதிர்காலத்தை எரித்துக் கொண்டு குடும்பத்திற்கு வாசனை தருகிறான். முதலில் பப்புக்குச் சென்ற அந்த நண்பனுக்கும், இப்பையனுக்கும் எவ்வளவு வித்தியாசங்கள்? அச்சிறுவனிடம் இருக்கும் பொறுப்பு கூட இவனுக்கு இல்லையே.அவனிடம் இருக்கும் பணம் இச்சிருவனிடம் இருந்திருந்தால் இறைவனிடம் நன்றி கூறியிருப்பேன். கொடுமை. யாரும் புரிந்துக்கொள்ளவில்லை ஊதுபத்தியை........
.jpg)

